நில அளவை உதவி இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
விழுப்புரம்: லஞ்ச பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் விழுப்புரம் நில அளவை உதவி இயக்குநர் உட்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில் நில அளவை பதிவேடுகள் துறை மாவட்ட அலுவலகம் மற்றும் நில அளவைகள் துறை உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இத்துறையில் வட்ட தலைநகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் வங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நில அளவை பதிவேடுகள் துறை மாவட்ட அலுவலகம் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கணக்கில் வராத 78 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அதில், அந்த பணம் பதவி உயர்வுக்காக ஐந்து அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், நில அளவை துறை உதவி இயக்குநர் ஜெய்சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தகுமார், விழுப்புரம் கோட்ட ஆய்வாளர் இளையராஜா, திருவெண்ணெய்நல்லுார் தாலுகா துணை ஆய்வாளர் துரைராஜ், விழுப்புரம் தாலுகா சர்வேயர் சக்திவேல் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவின்கீழ் வழக்குப் பதிந்தனர்.
மேலும்
-
அணைகள் நீர் மட்டம்
-
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
-
அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு: ஜூலை 3ல் அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு சிறப்புரை
-
மேகதாது அணைக்கு எதிர்ப்பு; பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவங்கினார் அன்புமணி
-
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; தர்மபுரி அக்சிதா முதலிடம்
-
இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா