மகளிர் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு
உடுமலை: உடுமலை ஜி.வி.ஜி., மகளிர் கல்லூரியில், தீயணைப்பு துறை சார்பில், மாணவியருக்கான தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.
மடத்துக்குளம் பயிற்சி நிலைய அலுவலர் சுமையா பர்வீன் தலைமை வகித்தார். இதில், சமையல் காஸ் சிலிண்டர்களைப் பாதுகாப்பாக கையாளும் முறை, திடீரென தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு பாதுகாப்புக்கருவிகளை பயன்படுத்துவது குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தீப்பற்றிக்கொண்டால், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது, சக மனிதர்களை எவ்விதம் மீட்பது, நிலநடுக்கம் போன்ற இயற்கைப்பேரிடர்கள் ஏற்படும் காலங்களில், பொதுமக்கள் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் செய்யக்கூடாத தவறுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
-
அரசு பஸ்கள் 'டிரிப் கட்': மலைப்பகுதி மக்கள் அவதி
-
துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி; கட்சிக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
-
தீ தடுப்பு மீட்பு பயிற்சி
-
ஒப்பந்தம் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ஆதவ் அறிவிப்பு
-
ஐரோப்பாவில் கோர தாண்டவமாடும் வெப்பஅலை; ஸ்பெயின், பிரான்சில் 2000 பேர் பலி
Advertisement
Advertisement