பந்தலுாரில் பகலில் ஒரு இரவு: கடும் குளிரால் மக்கள் அவதி
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் மழையுடன், கடும் மேகமூட்டம் நிலவுவதால் பகலும், இரவாக காட்சி தருகிறது.
பந்தலுார் பகுதியில் இரு நாட்களாக லேசாக மழை பெய்ய துவங்கியது. காலை நேரங்களில் கடும் மேகமூட்டம் நிலவுகிறது.
இதனால், நீர்மட்டம், எலியாஸ் கடை உள்ளிட்ட பகுதிகளில், பகலிலும் வெளிச்சம் இல்லாமல், இரவு போல் காட்சி தருகிறது. வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் இயக்கினாலும், புதிதாக சமவெளி பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்கள், வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமப்பட்டனர். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டதால், கடைகளிலும் இருள் நிலவி, பந்தலூர் பஜார் பகுதியும் வெளிச்சம் இல்லாமல் காணப்பட்டது. கடும் குளிரான காலநிலை நிலவுவதால் வெளியிடங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement