திமுக vs தவெக; புதிய பாடத்திட்ட குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

10



நமது நிருபர்




கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட பள்ளி பாடத்திட்ட வடிவமைப்பு குழுவை, தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது.

பழைய குழுவில் யார் யார்?

திமுக ஆட்சியில் பாடத்திட்டம் மாற்றி அமைக்க இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. அமைச்சர் மகேஷ் தலைமையில் நிபுணர்களை கொண்ட ஒரு குழுவும், சுற்றுச்சூழல் வல்லுநர் சுல்தான் அஹமது இஸ்மாயில் தலைமையில் பாடத்திட்ட வடிவமைப்புக்குழுவும் அமைக்கப்பட்டன.

நிபுணர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கல்வியாளர் மாடசாமி, கணிதத்துறை பேராசிரியர் ராமானுஜன், குழந்தை உரிமை செயல்பாட்டாளர் தேவநேயன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கர்நாடக இசை பாடகி சவும்யா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.


சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையிலான கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவில், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தொல்லியல் நிபுணர் ராஜன், ஓவியர் மணியம் செல்வன்,
இயற்பியல் வல்லுநர் ரீட்டா ஜான், முன்னாள் இணைப் பேராசிரியர் சுதந்திரமுத்து, தாவரவியல் வல்லுநர் மதிவாணன், வரலாற்று வல்லுநர் அசோகன், ஆங்கில மொழி கற்பித்தல் வல்லுநர் உமா ராமன், கணிதவியல் வல்லுநர் மஹாவீர், கல்வியாளர் சந்தன தேவன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலிப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் நிலையான மண் மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர் சுற்றுச்சூழல் நிபுணர். கலைத்திட்ட வடிவமைப்புக்குழு தயார் செய்யும் பாடத்திட்டத்தை நிபுணர் குழு இறுதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய குழுவில் யார் யார்?

தற்போது கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை, தமிழக அரசு மாற்றி அமைத்து 'மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநுால் உருவாக்கம்' என்ற புதிய குழுவை அமைத்துள்ளது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில், இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவில் இருந்த பாடவாரியான வல்லுனர்கள் அனைவரும் புதிய குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் தலைவராக, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினர்களாக,

* ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி வெங்கடேஷ்வரன்,

* சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான்,

* எம்.சுதந்திரமுத்து - முன்னாள் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.

* என்.மதிவாணன் - தாவரவியல் துறை முன்னாள் தலைவர், சென்னை பல்கலைக்கழகம்

* டி.அசோகன் - வரலாற்று பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.

* எஸ்.ஏஞ்சல் ரத்னாபாய் - ஐடி நிபுணர், மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம், புதுடில்லி.

* உமா ராமன் - ஆங்கில மொழி கற்பித்தல் நிபுணர், சென்னை.

* பி.மகாவீர் - முதல்வர், ஏ.எம்.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம்.

* மணியம் செல்வன் - ஓவியர், சென்னை.

* கே.ராஜன் - முன்னாள் வரலாற்று பேராசிரியர், புதுச்சேரி பல்கலைக்கழகம்.

* ஆர்.சந்தன தேவன் - கல்வியாளர், மகரிஷி வித்யா மந்திர், திருநீர்மலை.

* எம்.செல்வம் - முதல்வர், ஆசிரியர் பயிற்சி பள்ளி, நாமக்கல்.

* ஸ்ரீ திலீப் - பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

* கே.எஸ்.டி. ஆனந்த் அஜித் மகியா - கல்வி உரிமை ஆர்வலர் ஆகிய 14 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர், உறுப்பினர் செயலராகவும், பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர்கள் ஆகியோர், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

Advertisement