திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன்; வைகோ குற்றச்சாட்டு

41

சென்னை: திமுக ஆட்சியில் இருந்த கமிஷன், கட்டிங், கரப்ஷன் இருந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள். திமுக ஆட்சியில் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரேட் என கமிஷன் வசூலிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்த கமிஷன், கட்டிங், கரப்ஷனை இந்த ஆட்சியில் ஒழித்துவிட்டார்கள்.

திமுக கூட்டணியில் தான் இருந்தேன். கூட்டணியில் இருந்து கொண்டு அது பற்றி பேசுவது அயோக்கிய தனம். கூட்டணிக்குள் இருந்து கொண்டு கூட்டணியை அட்டாக் பண்ணி பேசுவது என்ன அரசியல் தர்மம்? கூட்டணி தர்மத்திற்காக பேசாமல் இருந்தேன், அதுதான் சரியான அணுகுமுறை.

ஒரு கட்சி கூட்டணிக்குள் இருந்து கொண்டு அவர்களை கண்டித்து பேசுவது நாகரிகமா? நீங்கள் எத்தனை கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். ஒரு மணி நேரம் வேண்டுமானாலும் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.



@block_P@

நிருபருடன் வைகோ வாக்குவாதம்!

திமுக ஆட்சியில் இருந்த கமிஷன், கட்டிங், கரப்ஷன் இருந்ததாக குற்றம்சாட்டிய வைகோவிடம் நிருபர் ஒருவர், ''அப்போது ஏன் கேட்கவில்லை'' கேள்வி எழுப்பினார்.

இதற்கு கடும் கோபம் அடைந்த வைகோ, நீங்கள் திட்டமிட்டு வந்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் என்றார். பிறகு, அந்த நிருபரிடம், ''உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

திட்டமிட்டு வந்து இருக்கிறீர்கள், உங்களை யார் ஏவி விட்டது. குழப்பம் செய்வதற்கு வந்து இருக்கிறீர்கள், இங்கே உங்களுக்கு வேலை கிடையாது, வெளியே போங்க''என வைகோ கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.block_P


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

கேள்வி கேட்ட நிருபருடன் சண்டை போட்ட வைகோ; செய்தியாளர் சந்திப்பு தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement