நுாலகங்களில் நாளேடுகள் இல்லாததால் அதிருப்தி

ஆர்.கே.பேட்டை:கிளை நுாலகங்களில், பிரதான தினசரி நாளேடுகள் இல்லாததால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிளை நுாலகங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, 'தினமலர்' உள்ளிட்ட தினசரி நாளேடுகள் வாங்கப்பட்டு வந்தன. ஆனால், அதன்பின் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெயரளவில் ஒரு சில தினசரி நாளேடுகள் மட்டுமே வரவழைக்கப்படுகின்றன.

தினசரி நாளேடுகள் இல்லாததால், நுாலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால், புத்தகங்களுடன், தினசரி நாளேடுகளையும் நுாலகங்களில் வாங்கி வைக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement