மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு பட்டா, வீடு கட்ட அனுமதி ஆணை
ஆனைமலை: ஆனைமலை அருகே, திவான்சாபுதூர், மீனாட்சிபுரம் பழங்குடியின குடியிருப்பை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சுமதி, சித்ரா ஆகியோருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், வீட்டு மனை பட்டாக்கள், பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பவன்குமார் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், பயானிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்தராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடித் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதிகள் மற்றும் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.
தமிழகம் முழுவதும், 400 நரிக்குறவர் பழங்குடியினர் மற்றும் 600 தரைப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் வசிக்கும் வீடடற்ற பழங்குடியினர், 1,000 பேருக்கு வீடுகட்டித் தரப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், தரைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு, 54 வீடுகள் மற்றும் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு, 136 வீடுகள் என மொத்தம், 190 இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் வாயிலாக தகவல் கோரிக்கை பெறப்பட்டதன் அடிப்படையில் இரண்டு பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா இடத்தில், தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1,250 ரூபாய் மதிப்பில், 3 மடக்கு குச்சிகள், 2 கறுப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும், சித்ராவின் கண் பார்வையற்ற இரண்டு குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும்
-
போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது
-
பிரபல ஹோட்டலில் ரூ.75,000 கையாடல் ஊழியர்கள் 3 பேர் கைது
-
காய்கறி, பழங்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து பெண்கள் உட்பட 4 பேர் காயம்
-
பயணியர் நிழற்குடை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
-
தலைநகர் டில்லியில் துவங்கியது எஸ்ஐஆர் பணிகள்: மஹாராஷ்டிரா, கர்நாடகாவிலும் மும்முரம்
-
சபரிமலை தங்கம் திருட்டில் கூட்டுச் சதி; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்