ரயில்வே ஸ்டேஷனில் குடிநீர் குழாய் சேதம்
உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் ‘ப்ளாட்பார்ம்’களில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், நீண்ட காலமாக பயணியரின் முக்கிய பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ரயில்களுக்கு காத்திருக்கும் பயணியருக்கு குடிநீர் வசதியில்லை.
‘ப்ளாட்பார்ம்’களில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் செயல்படுவதில்லை. தற்காலிக தீர்வாக சுத்திகரிப்பு கருவியை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இதே போல், ஒரு ப்ளாட்பார்ம்க்கு மட்டும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் ரயிலுக்கு காத்திருப்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மழை மற்றும் வெயில் காலத்தில், முதியவர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர்.
இப்பிரச்னைகள் குறித்து பயணியர் சார்பில், மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பயணியர் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும்
-
திமுக முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
-
போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது
-
பிரபல ஹோட்டலில் ரூ.75,000 கையாடல் ஊழியர்கள் 3 பேர் கைது
-
காய்கறி, பழங்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து பெண்கள் உட்பட 4 பேர் காயம்
-
பயணியர் நிழற்குடை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
-
தலைநகர் டில்லியில் துவங்கியது எஸ்ஐஆர் பணிகள்: மஹாராஷ்டிரா, கர்நாடகாவிலும் மும்முரம்