கருப்பு பேட்ஜ்யுடன் பணி செய்த தோட்டக்கலை அலுவலர்கள்
போடி:'உழவர் தொடர்பு திட்டம் 2.0' அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி போடியில் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு கிராம அளவில் ஒரே இடத்தில் விதைகள், பூச்சி, நோய் மேலாண்மை தீர்வு உள்ளிட்ட
ஒருங்கிணைந்த ஆலோசனைகள், தொழில் நுட்ப உதவிகள் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டது உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம். இத்திட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல், வணிகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு கள அலுவலர்கள் செயல்படுவர். ஆனால் இத்திட்டத்தில் ஒரு துறை அலுவலருக்கு மற்ற துறையின் தொழில் நுட்பங்கள் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை. இதனால் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலர்களுக்கும் கூடுதல் பணிச் சுமை ஏற்படும்.
இதனால் முந்தைய அரசு கொண்டு வந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 அரசு உத்தரவை ரத்து செய்யக் கோரி போடியில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இது போல பெரியகுளம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதியிலும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது
-
பிரபல ஹோட்டலில் ரூ.75,000 கையாடல் ஊழியர்கள் 3 பேர் கைது
-
காய்கறி, பழங்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து பெண்கள் உட்பட 4 பேர் காயம்
-
பயணியர் நிழற்குடை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
-
தலைநகர் டில்லியில் துவங்கியது எஸ்ஐஆர் பணிகள்: மஹாராஷ்டிரா, கர்நாடகாவிலும் மும்முரம்
-
சபரிமலை தங்கம் திருட்டில் கூட்டுச் சதி; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்