தரைப்பாலத்தின் தடுப்புச்சுவர் இரவில் இடித்து தரைமட்டம்

அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுார், இ.பி.நகர் அருகே, அரூர் நெடுஞ்சாலையின் இறக்கமான பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதனால் அச்சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மீது, தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. அதை இரு நாட்களுக்கு முன், ரியல் எஸ்டேட் விற்பனைக்கு வசதியாக தனி நபர், இரவில் இடித்து தரைமட்டமாக்கினார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. அத்துடன் மக்கள் வரிப்பணத்தில் அரசு அமைத்த தடுப்புச்சுவரை, தனி நபர் இடித்தது, சர்ச்சையை

ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சங்கர் கூறுகையில், ''தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரிக்கப்படும்,'' என்றார்.

Advertisement