பெங்களூரு கல்குவாரியில் பாறை சரிந்தது: பீஹார் தொழிலாளர்கள் 7 பேர் பலி
பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்த விபத்தில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மடப்பட்டணா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரியில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. புதிய கிரஷர் இயந்திரம் அமைப்பதற்காக, தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கற்களை அகற்றும் பணி நடந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக ராட்சத பாறை உருண்டு, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்து நடந்த நேரத்தில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் அங்குப் பணியாற்றி வந்துள்ளனர். இதில், 7 பேர் பாறைக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், வேறு யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா எனத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் டிகே சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (5)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
02 ஜூலை,2026 - 21:15 Report Abuse
காங்கிரஸ் சம்பந்தமான குவாரி 0
0
Reply
மலுவுமன்னாரு - ,
02 ஜூலை,2026 - 18:45 Report Abuse
ஹி.. ஹி.. இந்தியாவில் எல்லாமே விலை மளுவு ஹை. மனித உயிர்களும் மலுவு ஹை. வெளிநாட்டில் பேசி பெருமிதம் ஹை. 0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
02 ஜூலை,2026 - 15:37 Report Abuse
மிக மிக வேதனை அளிக்கிறது வயிற்று பிழைப்புக்கு ஊர் விட்டு ஊர் வந்து இது போல உயிர் இழப்பது 0
0
Reply
Vasan - ,இந்தியா
02 ஜூலை,2026 - 13:47 Report Abuse
மிகவும் துரதிஷ்டமான கோர விபத்து. கீழே பணியாளர்கள் வேளையில் இருக்கும் பொழுது, அவர்கள் தலைக்கு மேல் இயந்திரங்களை இயக்கியது தப்பு. 0
0
Reply
Nandakumar Naidu - ,
02 ஜூலை,2026 - 13:30 Report Abuse
மிகவும் சோகமான நிகழ்வு உறவுகளை இழந்து வேதனையடையும் அவர்கள் அனைவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களும் மற்றும் அந்த ஏழை தொழிலாளிகளின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். வேறு மாநிலங்களில் இது போன்று நடந்திருந்தால் பிண அரசியல் செய்யும் ராகுல் காந்தி, பிரியங்கா வாத்ரா மற்றும்சோனியா காந்தி கர்நாடக வந்து அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி ஒவ்வொரு இழப்பிற்கும் 50 லட்சம் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும். 0
0
Reply
மேலும்
-
தகனம் மேடையில் எரிவாயு தட்டுப்பாடு திறந்த வெளியில் எரிக்கப்பட்ட உடல்கள்
-
சம்பளம் வரவில்லை ஊழியர்கள் தவிப்பு
-
தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் செடிக்கு தண்ணீர் ஊற்றியவர் விபத்தில் பலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
-
மூதாட்டி மாயம்
-
சாலையை விரைந்து போட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
-
கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
Advertisement
Advertisement