மனைவியால் சிக்கினார் மத்திய அமைச்சர்!
பார்லிமென்ட், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல விவகாரங்களை என் பத்திரிகையாளர் வாழ்க்கையில் ரிப்போர்ட் செய்துள்ளேன். ஆனால் இன்று சொல்லப்போகும் விஷயம் முற்றிலும் மாறானது. கணவன், மனைவி இருவரும் ஒரே தொழிலில் இருந்தால் பிரச்னைதான்… அதிலும் ஒருவர் அரசியல்வாதியாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவர் ஒரு அரசியல்வாதி…வக்கீலும் கூட. அவரது மனைவியும் வக்கீல்.
நல்ல நண்பர்
அந்த அரசியல்வாதியின் மனைவி அடிக்கடி உச்சநீதிமன்றத்திற்கு சில வழக்குகளில் வாதிட வருவார். நல்ல நண்பர். மனம் விட்டு நன்றாக பேசுவார். ஆனால் மற்ற நிருபர்களிடம் பேசமாட்டார். பல முக்கியமான வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை அதிகமாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்..
பார்லிமென்டில் பிரச்னை
ஒரு முக்கிய வழக்கில் மனைவி ஆஜரானார். இந்த வழக்கு அவரது கணவர் அமைச்சராக இருந்த துறை சம்பந்தப்பட்டது. இந்த விவகாரம் எப்படியோ எதிர்க்கட்சிகளுக்கு தெரியவந்தது. பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதை பெரிய விவகாரமாக்கிவிட்டனர்.
லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பெரும் அமளி. அமைச்சர் சார்ந்த துறையின் வழக்கில் எப்படி அவரது மனைவி ஆஜராகலாம்? வேண்டுமென்றே அமைச்சர் இதை செய்துள்ளார்.
இதன் மூலம் அவரது மனைவிக்கு மிகப் பெரிய தொகை அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் பார்லிமென்ட் நடவடிக்கைகள் 2 நாட்களுக்கு பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் அமைச்சரின் வீட்டிலும் புயலை ஏற்படுத்திவிட்டது.
தொடக்கத்தில் மனைவி எந்த வழக்கில் ஆஜராகியுள்ளார் என தனக்கு தெரியாது என அமைச்சர் சொல்ல, எம்பிக்கள் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். வீட்டில் என்ன நடக்கிறது என அமைச்சருக்கு தெரியாதா? என எம்பிக்கள் பார்லிமென்டில் கேள்வி எழுப்பினர்.
கணவர் எனக்கு ஜூனியர்
இந்த விவகாரம் பார்லிமென்டில் பிரச்னையை கிளப்பிய மறுதினம் ஒரு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு வந்திருந்தார் மனைவி. என்னைப் பார்த்து எப்படியிருக்கிறீர்கள் என கேட்டார்.
“உங்களுத்தான் பிரச்னை போலிருக்கிறதே” என்றேன்.
கோர்ட் அறை வெளியே போடப்பட்டிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து கொண்டார். என்னைப் பார்த்து, 'உட்காருங்கள்' என்றார்.
“பிரச்னை எதுவுமில்லை…எதிர்க்கட்சிகளுக்கு ஏதாவது விஷயம் தேவை..இதில் நான் மாட்டிக்கொண்டேன்” என்றார்.
“நீங்கள் எந்த வழக்கில் ஆஜராகிறீர்கள் என அவரிடம் சொல்வதில்லையா?” என கேட்டேன்.
“ நான் எதற்கு அதைச் சொல்ல வேண்டும்…அவர் என்ன செய்கிறார் என என்னிடம் சொல்கிறாரா? சொல்லப்போனால் வக்கீல் தொழிலில் எனக்கு அவர் ஜூனியர்...நான் தான் முதலில் சீனியர் வக்கீலிடம் ஜூனியராக சேர்ந்தேன்…பிறகுதான் இவர் அங்கு வந்து சேர்ந்தார்” என்றார்.
கணவன் மனைவி இருவருமே ஒரு பிரபல சீனியர் வக்கீலிடம் ஜூனியர்களாக பணியாற்றியுள்ளனர்.
“அந்த சீனியர் எல்லா கேஸ்களையும் இவருக்கே கொடுப்பார்…எனக்கு கொடுப்பதில்லை….இதில் அப்போது எனக்கு பெரிய வருத்தம்..” என்றார்.
“பெண்கள் சுதந்திரம் எல்லாம் வெறும் பேச்சு”
இந்த விவகாரத்தால் வீட்டில் பிரச்னை வந்ததா என கேட்டேன். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர் பேசத் தொடங்கினார். “ இந்த வழக்கில் ஆஜரானதை எனக்கு சொல்லவில்லையே என கேட்டார்,'' என்றவர் தொடர்ந்து, 'நான் எதற்கு அவரிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும்' என்றார். முகத்தில் வருத்தம் தெரிந்தது.
காரிடாரில் செல்லும் வக்கீல்கள் எங்களைப் பார்த்துக்கொண்டே சென்றனர். “பார்லிமென்டிலும்…அரசியல் மேடைகளிலும் மட்டும்தான் பெண்கள் சுதந்திரம் என பேசிகிறார்…ஆனால் வீட்டில் எதுவும் கிடையாது...எல்லாம் வெறும் பேச்சுதான்”. அவரது கண்கள் சற்று கலங்க ஆரம்பித்தன.
“நீங்கள் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள்…அதில் இதுவும் ஒன்று…கவலைப்படாதீர்கள்” என அவருக்கு சமாதானம் சொன்னேன். “இந்த விவகாரத்தை எழுப்பிய அந்த எம்.பி., இன்று மாலை ப்ளைட்டில் சென்னை செல்கிறார்” என ஒரு தகவலை அவரிடம் சொன்னேன்..
“அப்படியா…அவரை ஒரு பிடி பிடித்துவிடுகிறேன்” என எழுந்து கொண்டார். இது நான் செய்த ஒரு பெரும் தவறு என்பதை மறுநாள் தெரிந்து கொண்டேன்.
மாட்டிக்கொண்டேன்
கோர்ட்டிற்கு நான் கிளம்பும் சமயத்தில் என் மொபைல் போன் சிணுங்கியது. அமைச்சர் - மனைவி விவகாரத்தை பார்லிமெண்டில் எழுப்பிய எம்.பி.,யின் போன். அவர் தனக்கு விமான நிலையத்தில் நடந்ததை எனக்கு போனில் விளக்கினார். “ஏர்போர்ட் லவுஞ்சில் என் ப்ளைட்டிற்காக காத்திருந்தேன். அப்போது இந்த பெண்மணி (அமைச்சரின் மனைவி) வந்தார். என்னைப் பார்த்ததும் பிடித்துக்கொண்டார்..
எப்படி இந்த விஷயத்தை பார்லிமென்டில் நீங்கள் எழுப்பலாம்? என்னிடம் கேட்டிருந்தால் நானே உங்களுக்கு பதில் சொல்லியிருப்பேனே….குடும்ப விஷயத்தை அரசியல் லாபத்திற்காக எழுப்பிவிட்டீர்களே என பேசிக்கொண்டே போனார். அக்கம் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். என் நிலைமை பரிதாபமாகிவிட்டது. நான் அவரிடம் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டேன்” என வருத்தப்பட்டார்.
“நான் இந்த ப்ளைட்டில்தான் போகிறேன் என அவருக்கு எப்படி தெரிந்தது என எனக்கு தெரியவில்லை” என என்னிடம் சொல்ல எனக்கோ அதிர்ச்சி.. நான் தான் அவரிடம் சொன்னேன் என்பதை எம்.பி.,யிடம் நான் வாய்திறக்கவில்லை.
பார்லிமென்டில் பதில்
இந்த விவகாரம் முடிகிற மாதிரி தெரியாத காரணத்தால் அமைச்சர் பார்லிமென்டில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். “என் மனைவி ஒரு சுயேச்சையான மூத்த வழக்கறிஞர். அவர் எந்த வழக்குகளில் ஆஜராகிறார் என நான் கண்காணிப்பதில்லை..என் துறை சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் ஆஜராகிறார் என தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை தடுத்திருப்பேன்” என அவையில் விளக்கமளித்தார்.
சம்பந்தப்பட்ட துறையும் விளக்கம் அளித்தது. சக வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதால்தான் இந்த வழக்கை நான் எடுத்துக்கொண்டேன். இதற்கு குறைந்த பீஸ்தான் வாங்கியுள்ளேன் என மனைவியும் விளக்கமளிக்க ஒரு வழியாக இந்த விஷயம் முடிவிற்கு வந்தது.
- அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: vaithi@dinamalar.in
அந்த நல்லவன் ஜாமீனில் வெளியே திரியும் ....சரி தானே
கோர்ட்டுகளில் காமெடிகள் .
நீட் தேர்வு விஷயத்தில் அம்மையாரின் வாதம், பிரமாதம் .......
அப்படியே மாடியில விவசாயம் செஞ்சு கோடி கோடியா சம்பாதிச்ச விவகாரம் பதியும் கொஞ்சம் சொல்லுங்களேன்? ஆனா ஒன்னு, சக்கரைய காணுமென்னா எறும்பு தின்னுடுச்சுனு சொல்லி அப்போ அந்த சாக்குமூட்டைனு கேக்கும்போது அத எலி கடிச்சிடுச்சுனு சொன்ன அயோக்கிய பயலுகளையே இந்த சட்டம் ஒன்னும் செய்யாம மரியாதையா மரினால சமாதி கட்டிகுடுத்திருக்கும்போது இந்த காலிபிளவர் கோஷ்டியெல்லாம் சும்மா ஜூஜுபிதாங்கறீங்களா?
ப சி யும் இந்த மாதிரி கேஸ் தானே. எங்கேயும் மாட்டுன மாதிரி தெரியலையே. நீட் தேர்வு சமாசாரத்தில் கூட நழுவிட்டாங்க. ராஜகண்ணப்பனிடம் தோத்து போய் கடைசி நிமிடங்களில் கருணாவின் கள்ளத்தனத்தால் தப்பி
பொழச்சவரு.
பா சி... நளினிமேலும்
-
விலா குருத்தெலும்பின் மூலம் காது மறுசீரமைப்பு
-
மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து கட்சிகளையும் திரட்ட வேண்டும்; அன்புமணி பேட்டி
-
எமனேஸ்வரம் மார்க்கெட் தெருவில் ஓடும் கழிவுநீர்: வியாபாரிகள், மக்கள் அவதி
-
போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
-
போலீசார் தாக்கியதாக வாலிபர் புகார்
-
பெரியாறு புலிகள் காப்பகத்தில் யானை தாக்கி வனக்காவலர் காயம்