மின் இணைப்புக்கு ரூ.4,000 லஞ்சம்; வணிக ஆய்வாளர் கைது
நமது நிருபர்
வீட்டிற்கு கூடுதல் மின் இணைப்பு வழங்க, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய வணிக இன்ஸ்பெக்டரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகரைச் சேர்ந்த தருண் என்பவர், தன் வீட்டிற்கு கூடுதல் மின் இணைப்பு பெற, அப்பகுதியில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இணைப்பு வழங்க, மின் வாரிய வணிக இன்ஸ்பெக்டர் தியாகராஜன், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரி ன் அறிவுரைபடி, மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று மதியம் சென்ற தருண், ரசாயனம் தடவிய நோட்டுகளை, தியாகராஜனிடம் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த போலீசா ர், கையும் களவுமாக தியாகராஜனை கைது செய்தனர்.
வி.ஏ.ஓ., சிக்கினார் செ ங்கல்பட்டு மாவட் டம், வேடந்தாங்கல் அடுத்த வளையப்புத்துாரைச் சேர்ந்தவர் சுந்தர வடிவேல், 55. அதே பகுதியில் 81 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாற்றம் செய்ய, கணினி மூலம் பதிவு செய்திருந்தார்.
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட வளையப்புத்துார் வி.ஏ.ஓ., புருஷோத்தமனிடம், ரசாயனம் தடவிய 5,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை சுந்தர வடிவேலு, நேற்று தந்துள்ளார். அதை வாங்கிய புருஷோத்தமனை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பதவி வெறிபிடித்த செயலாற்ற கொள்ளைக்கூட அரசில் லஞ்சம் ஊழல் சட்டவிரோத செயல்கள் பெருகிவிட்டன
இந்த ஊழல் பெருச்சாளிகள் எப்போதுதான் ஒழிவார்களோ ?
40,000 கோடி அடித்தவர்கள் வெளியே ஜாலி ஆக சுத்தி கிட்டு இருக்காங்க.
அய்யா முதல்வர் விஜய் அவர்களே இதற்கெல்லாம் என்றைக்குத்தான் முடிவு கட்டப்போகிறீர்கள்? தொடர்ச்சியாக எந்த தைரியத்தில் தப்பு செய்கிறார்கள்? புரியவில்லை.
லஞ்ச லாவண்யத்தில் புரையோடி கிடக்கும் திராவிட. நாட்டில், தண்டனைகள் கடுமையாகும் வரை இது போன்ற கைது நாடகம் ஒரு தொடர் கதை…