பெரியாறு புலிகள் காப்பகத்தில் யானை தாக்கி வனக்காவலர் காயம்
கூடலுார், ஜூலை 3-
கேரளா திருவனந்தபுரம் காட்டாக் கடையைச் சேர்ந்தவர் சஜீஸ் ராஜ் 47. பெரியாறு புலிகள் காப்பகத்தில் வனக் காவலராக உள்ளார். பணியை முடித்து சுந்தரமலை வனப்பகுதி வழியாக வனக்காவலர்களுடன் நடந்து வரும்போது திடீரென அங்கு வந்த காட்டுயானை சஜீஸ் ராஜை தாக்கி அருகிலுள்ள கட்டாமுடி ஆற்றில் தூக்கி வீசியது. இதில் நடக்க முடியாமல் பலத்த காயம் அடைந்தால், உடன் வந்த காவலர்கள் யானையை விரட்டி காயமடைந்தவரை டோலி கட்டி தூக்கிக்கொண்டு 6 கி.மீ., தூரம் வனப்பகுதி வழியாக நடந்து வந்து, நெய்யாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பெரியாறு புலிகள் காப்பகத்தின் பகுதிகளான சுந்தரமலை, தாமரை உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு தேக்கடியில் இருந்து வனக்காவலர்கள் செல்ல 15 கி.மீ.,க்கு மேல் அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வனக் காவலர்கள் புலம்பியுள்ளனர்.
மேலும்
-
அரசு விடுதிக்கு செல்ல மாணவர்கள் 2 கி.மீ., நடந்து செல்லும் அவலம்
-
தையற்கலைஞர்கள் சங்கக்கூட்டம்
-
கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு
-
பக்தர்கள் பால்குடம்
-
பாலித்தீன் பயன்பாடு அரசுக்கு கோரிக்கை
-
சூப்பர் ரிப்போட்டர் வடிகால் வசதி இன்றி தெருக்களில் கழிவுநீர் தேங்கும் அவலம் சங்கராபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி தவிப்பு