தங்கம் சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு

1

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 13,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 30) ஆபரண தங்கம், கிராம், 13,200 ரூபாய்க்கும், சவரன், 1,05,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்றைய நிலவரம்




நேற்று (ஜூலை 01) காலை தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் குறைந்து, 13,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் சரிவடைந்து, 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மாலை, தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் உயர்ந்து, 13,250 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 1,200 ரூபாய் அதிகரித்து, 1,06,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்தது.


இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (ஜூலை 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 13,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


மதியம் மேலும் 1,200 ரூபாய் அதிகரித்த தங்கம், ஒரு சவரனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 400 ரூபாய் ஆக விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்


பிரத்யேக வீடியோ!

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து அறிந்து கொள்ள வேண்டுமா?

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement