சுரங்கப்பாதையில் வாகனம் சிக்கியதால் பரங்கிமலையில் போக்குவரத்து நெரிசல்
ஆலந்துார்: பரங்கிமலை ரயில் நிலையம் செல்லும் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப்பணி நடப்பதால், ஆலந்துார் –- ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் பரங்கிமலை சுரங்கப்பாதையில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நேற்று காலை, வழக்கத்திற்கு மாறாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் செல்ல முயன்று ஒரு வாகனம் சிக்கியதால், இந்த நெரிசல் மேலும் பல மணி நேரம் நீடித்தது.
இதனால், பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது.
இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தாமதமாக வந்து போக்குவரத்தை சீரமைத்ததால், பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிகளும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பரங்கிமலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரை, கருணீக்கர் தெரு சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது