கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயன் மகன் சின்னதுரை, 26; தச்சர். இவர், நேற்று முன்தினம் அந்திலி கிராமத்தில் தச்சர் வேலைக்கு சென்றார். அப்போது டாஸ்மாக் அருகே உள்ள ஏரியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, சின்னதுரை பையில் இருந்த 800 ரூபாய் பணத்தை பறித்து கொண்டார்.
சின்னதுரை சத்தமிட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து, பணம் பறித்த நபரை பிடித்து அரகண்டநல்லுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கோட்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ் எட்வின்ராஜ், 21; என தெரிய வந்தது. அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிவு லாரன்ஸ் எட்வின்ராஜை கைது செய்தனர்.
மேலும்
-
விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பராமரிப்பில் கவனம் அவசியம்; அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
-
உதவி பேராசிரியர் பணி தேர்வு; குளறுபடிகளுக்கு அரசு விளக்கம்
-
கோவில்களில் முறைகேடா? புகார் அளிக்கலாம்
-
நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்த ஊழியர்கள் 1,000 பேர் நீக்கம்
-
ஹெச்.பி.வி., தடுப்பூசி போட சிறுமியர் தயக்கம்; அச்சம் வேண்டாம் என்கிறது மருத்துவத்துறை
-
சிங்கப்பூர் மருத்துவமனையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு 'அட்மிட்'