தகனம் மேடையில் எரிவாயு தட்டுப்பாடு திறந்த வெளியில் எரிக்கப்பட்ட உடல்கள்
கூடலுார்: கூடலுார் காலம்புழா எரிவாயு தகனம் மேடையில், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, இறந்தவர்கள் உடலை திறந்தவெளியில் எரியூட்டியதால் உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கூடலுார் காலமபுழா பகுதியில் நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை பல்வேறு நடைமுறை சிக்கல் காரணமாக, அடிக்கடி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இறந்தவர்கள் உடலை அவ்வப்போது திறந்த வெளியில் எரியூட்டி வந்தனர்.
தொடர்ந்து, நகராட்சி சார்பில், சீரமைக்கப்பட்டு, தனியார் அமைப்பு பராமரிப்பில் தடைஇன்றி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, இறந்தவர்கள் உடல்களை, தகன மேடை எரியுட்டாமல், அதனை ஒட்டிய திறந்தவெளியில் எரியூட்டினர். இதனால், உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மக்கள் கூறுகையில், ‘இங்கு வரும் உடல்களை திறந்த வெளியில் எரியூட்டுவதை தவிர்த்து, தகன மேடையில் எரியூட்டும் வகையில், தேவையான எரிவாயு சிலிண்டர்களை இருப்பு வைக்க வேண்டும்,’என்றனர்.
மேலும்
-
விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பராமரிப்பில் கவனம் அவசியம்; அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
-
உதவி பேராசிரியர் பணி தேர்வு; குளறுபடிகளுக்கு அரசு விளக்கம்
-
கோவில்களில் முறைகேடா? புகார் அளிக்கலாம்
-
நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்த ஊழியர்கள் 1,000 பேர் நீக்கம்
-
ஹெச்.பி.வி., தடுப்பூசி போட சிறுமியர் தயக்கம்; அச்சம் வேண்டாம் என்கிறது மருத்துவத்துறை
-
சிங்கப்பூர் மருத்துவமனையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு 'அட்மிட்'