கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு

திருவாடானை: திருவாடானை அருகே வழிமத்துார் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுந்தரம் 52, மகாலிங்கம் 53.  இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. அங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் கம்பு, கற்களால் மோதிக் கொண்டனர்.

சுந்தரம் புகாரில் மகாலிங்கம் 53, 17 வயது சிறுவன், வினோத் 25, ஆகிய 3 பேர் மீதும், மகாலிங்கம் புகாரில் சுந்தரம், முருகாண்டி 67, ஆகிய 2 பேர் மீதும் திருவாடானை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

Advertisement