அரண்மனைக்காரன் தெருவில் நெரிசல் தீர்வு காண மாநகராட்சிக்கு உத்தரவு
சென்னை: அரண்மனைக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சியும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்த மனு:
உயர் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள அரண்மனைக்காரன் தெருவில் சர்ச், பள்ளிகள், உணவகங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ்கூட செல்ல முடிவதில்லை.
இதுகுறித்து, போலீஸ் கமிஷனர், பூக்கடை இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்து ஓராண்டாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
போக்குவரத்து தொடர்பான பிரச்னையை சரிசெய்வதில் அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள். எனவே, இந்த விவகாரத்தில், 2019ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, இதுவரை நிறைவேற்றாவிட்டால் உடனே நிறைவேற்ற வேண்டும்.
அரண்மனைக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
2019 ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்றுவரை நிறைவேற்றவில்லை? அரசு இயந்திரம் இதுமாதிரி இயங்கினால் நாடு எப்படி உருப்படும். அவங்களுக்கு என்ன ? மாசா மாசம் கரெக்ட்டா சம்பளம் கிம்பளமும் வந்துவிடுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்யணும். அப்போதான் இனிமேல் இது மாதிரி நேராது.மேலும்
-
அதிமுகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்; வைகைச் செல்வன் ராஜினாமா
-
கோவில்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் அழைப்பு
-
2026, தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் : 118க்கு 6 படங்கள் மட்டுமே லாபம்!
-
பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம்; இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கை
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘உழைப்பும் மன உறுதியும் இருந்தால் ஜெயிக்கலாம்!’
-
முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது