சின்ன காஞ்சி கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் தொடக்கம்
ஜூலை 3 / பி.சீனிவாசன் / காஞ்சிபுரம் / 9087585110 / 1035 / 2:23 மணி.
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நேற்று தொடங்கியது.
சின்ன காஞ்சிபுரம் வரதராஜபுரம் தெருவில், வரசக்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், கங்கையம்மன் கோடை உத்சவம் நான்கு நாட்கள் நடக்கும்.
இந்தாண்டு உத்சவம் நேற்று காலை 7:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கும், வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிேஷகத்துடன் தொடங்கியது. இன்று இரவு 9:00 மணிக்கு சின்னவேப்பங்குளத்தில் இருந்து ஜலம் திரட்டுதல் நிகழ்வும், நாளை காலை 4:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்வு நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையிலிடப்பட்டு பூஜை நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகக்குழு மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது