பராமரிப்பில்லாத அம்மா பூங்கா சேதமடைந்த உடற்பயிற்சி கூடம்
மதுராந்தகம் ஜூலை 4–
பெரும்பாக்கத்தில் உள்ள அம்மா பூங்காவில், பழுதடைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சி உள்ளது. பெரும்பாக்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 2016ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.
இதில், சிறுவர்களுக்கான ஊஞ்சல், பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடம் மற்றும் நடைபயிற்சிக்கான நடைபாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பெரும்பாக்கம் சுற்றியுள்ள பகுதி மக்கள் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது பராமரிப்பின்றி அம்மா பூங்காவில் இருந்த சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் முழுதும் சேதமடைந்துள்ளன.
உடற்பயிற்சி கூடங்கள் குடி மகன்களின் கூடாரமாக மாறி உள்ளது. நடைபயிற்சிக்கான நடைபாதை, நீரூற்றுகள், கழிப்பறை, மின் விளக்குகள், உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை முற்றிலும் பழுதுடைந்து உள்ளன. செடி, கொடிகள் சூழ்ந்து உபகரணங்கள் துருப்பிடித்து உள்ளது. விஷ ஐந்துக்கள் நடமாட்டமும் இருப்பதால், அப்பகுதி மக்கள் அம்மா பூங்காவிற்குள் வர அச்சப்படுகின்றனர்.
எனவே, பழுதடைந்துள்ள விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது