அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அமைச்சரிடம் மனு

செய்யூர், ஜூலை 4-–

செய்யூர் சட்டசபை தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, செய்யூர் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ, ராஜசேகர், தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரிடம் நேற்று மனு அளித்தார்.

அதன் விபரம்:

செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஜே..ஜே.எம்., திட்டத்தில் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நீர்நிலைகளை துார்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், பல்வேறு அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement