நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்த ஊழியர்கள் 1,000 பேர் நீக்கம்
சென்னை: தமிழக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில், ஒப்பந்த அடிப்படையில், தினக்கூலியாக பணியாற்றி வந்த, 1,000 பேர் திடீரென வேலையை இழந்துள்ளனர்.
தமிழகம் முழுதும், 320 உதவி கோட்ட பொறியாளர்கள் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தொழில்நுட்ப உதவியாளர், காவலர்கள் என, 1,000 பேர் ஒப்பந்த அடிப்படையில், தினக்கூலிகளாக பணியாற்றி வந்தனர்.
இவர்களுக்கு மாதம், 15,000 முதல் 20,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இவர்களில் சிலர், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். கடந்த, 1ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என, அவர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க பொதுச்செயலர் மாரிமுத்து கூறியதாவது:
தினக்கூலியாக பணியாற்றி வந்த 1,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் தான் இந்த பணியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே பணிச்சுமை எங்களுக்கு அதிகம். எனவே, அவர்களுக்கு மீண்டும் அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு