வேலைக்கு பணம் கொடுக்காதீங்க: தபால் துறை எச்சரிக்கை
சென்னை: 'தபால் துறையில் வேலை எனக்கூறி, பணம் கேட்கும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்' என, மத்திய தபால் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தபால் துறையின் தமிழக வட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தபால் துறையின் தமிழக வட்டத்தின் பெயரில், போலியான பணி நியமன ஆணைகளும், ஆள்சேர்ப்பும் நடப்பதாக தெரிகிறது. பணி நியமன உத்தரவுகளை வழங்கவோ அல்லது ஆள்சேர்ப்புக்கோ எந்தவித கட்டணத்தையோ, ஆதாயத்தையோ தபால் துறை கோருவதில்லை. அவ்வாறு யாராவது கூறினால், மோசடி பேர்வழிகள் என்பதை உணர வேண்டும்.
அவ்வாறான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாமல், அவர்கள் குறித்த விபரங்களை தபால் துறை மற்றும் காவல் துறையிடம் புகாராக அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்தால், அதற்கு தபால் துறை பொறுப்பேற்காது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement