பெண் பலாத்காரம் வாலிபர் கைது

விருகம்பாக்கம்: ஜூலை 4-: பழகிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங் கள், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

ஆலப்பாக்கம், நடேசன் நகரை சேர்ந்த 27 வயது இளம்பெண், மதுரவாயல் போலீசில், ஏப்., 29ல் புகார் ஒன்றை அளித்தார்.

அதன் விபரம்:

சிங்கப்பூரில், தனியார் கிளப்பில் நடன கலைஞராக பணியாற்றியபோது, மதன் பிரபு, 36, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

காதலிப்பதாக கூறி நெருங்கி பழகிய அவர், குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து, என்னை 'முழுதாக' புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.

அவற்றை காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

விருகம்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்து, கொளத்துாரைச் சேர்ந்த மதன் பிரபுவை, நேற்று கைது செய்தனர்.

Advertisement