கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே கிணற்றில் இறந்து கிடந்த மேஸ்திரி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாணாபுரம் அடுத்த மையனுார், காட்டுகொட்டகையைச் சேர்ந்தவர் அந்தோணி மகிமை ராஜ் என்கிற விஷால், 45; மேஸ்திரி. இவருக்கு விக்டோரியாராணி என்ற மனைவியும், ரூபினா, 17; ரீனா, 12; என்ற 2 மகள்கள் உள்ளனர்.

விக்டோரியா தனது மகள்களுடன் சவரியார்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார். கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற விஷால் வீடு திரும்பவில்லை. இவர் வேலைக்கு வெளியூர் சென்றிருப்பதாக நினைத்திருந்தனர்.

இந்நிலையில், சிங்காரதோப்பு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விஷால் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, விஷால் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.

Advertisement