காட்டுமன்னார் கோவிலில் பயங்கர வெடி சத்தம் பொதுமக்கள் அச்சம்
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் மற்றும் குமராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் வெடி சத்தத்தால், பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் குமராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே திடீரென, வெடி சத்தம் கேட்டு வருகிறது. குறிப்பாக கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் கடந்த சில தினங்களாக, பயங்கர அதிர்வுடன் கூடிய வெடிச்சத்தம் கேட்பதாக, அப்பகுதி தெரிவித்துள்ளனர்.
அ தன் அதிர்வு, 15 கி.மீ., சுற்றளவு தொலைவு வரை உணரப்படுவதாக பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
இந்த வெடிச்சத்தத்திற்கும், விமானங்களின் இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை தெரியவில்லை.
இந்த மர்ம வெடிச்சத்தம் எந்த இடத்தில் இருந்து ஏற்படுகிறது, இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியாத நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தை கண்டறிந்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது