300 போதை மாத்திரைகள் ‘டம்மி’ துப்பாக்கி பறிமுதல்
தாம்பரம்: தாம்பரம் அருகே போதை கும்பலை கைது செய்த போலீசார், 300 போதை மாத்திரைகள் மற்றும் ‘டம்மி’ துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை அமோகமாக நடப்பதாக, தாம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
போலீசாரின் சோதனையில், தாம்பரத்தை அடுத்த கடப்பேரியில் போதை மாத்திரைகள் பதுக்கி விற்பனை செய்து வரும் கும்பல் சிக்கியது.
அவர்கள் கடப்பேரியைச் சேர்ந்த ரூபன், 20, முடிச்சூரைச் சேர்ந்த சக்திவேல், 28, மனோஜ் குமார், 26 மற்றும் ரஞ்சித் குமார், 26, என்பது தெரிய வந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சக்திவேலின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 போதை மாத்திரைகள், மூன்று கத்திகள், ஒரு போலி துப்பாக்கி, ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!’ ––––––––––––––
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்