ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரிக்கை 

கோவை: மாநகர பொது தொழிலாளர்கள்(-சி.ஐ.டி.யு.)சார்பில், 31-ம் ஆண்டு பேரவை கூட்டம், கணபதியில் உள்ள இன்ஜினியர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ரமணி தலைமை வகித்தார்.

‘பெண் தொழிலாளர்களுக்கு 55 வயது முதல், ரூ.3000 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும், இயற்கை மரண உதவி தொகையை ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர்  நவீந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement