கால்நடை கடன்களையும் தள்ளுபடி செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சூலூர்: விவசாயிகள் சங்கம் (ஜாதி, மதம், கட்சி சார்பற்றது) சார்பில், உழவர் தின பேரணி மற்றும் உழவர் உரிமைக்காக உயிர் நீத்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம், சின்னியம்பாளையத்தில் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசுகையில், உணர்வோடும், பிணைப்போடும் உழைக்கும் விவசாயிகளால், தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இந்த நிலை மாற வேண்டும். கிராமங்களில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் தான் நாடு முன்னேறும். பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும், என்றார்.
முன்னதாக, விவசாயிகளுக்காக போராடி மறைந்த விவசாயிகளின் உருவ படங்களுக்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பயிர் கடன் ரத்து ஆணையில் திருத்தம் செய்து, விவசாயிகள் பெற்ற கால்நடை கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!’ ––––––––––––––
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்