ஓட்டல் பொருட்கள் சேதம்: தம்பதி மீது வழக்கு பதிவு
புதுச்சேரி: ஓட்டல் பொருட்களை வெளியே வீசிய சேதப்படுத்திய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காராமணிக்குப்பம், மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணாசாமி மனைவி சரோஜா, 60. இவர், அதே பகுதியில் நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடத்தில், வாடகை செலுத்தி பல ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த 3ம் தேதி காலை சரோஜா கடையை திறக்க வந்தபோது, அவரது கடையின் பூட்டின் மீது மற்றொரு பூட்டு, போடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் விசாரிக்கையில், நாகலிங்கம் அண்ணன் சிவக்குமார் என்பவர் மற்றொரு பூட்டு போட்டது தெரியவந்தது.
இந்நிலையில், அன்று இரவு சிவக்குமார், அவரது மனைவி கல்பனா ஆகியோர், சரோஜாவின், பூட்டை உடைத்து, உள்ளே இருந்த அடுப்பு, மேஜை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் வீசி சேதப்படுத்தினர்.
தகவல் அறிந்து சென்ற சரோஜாவை, தம்பதியினர் கடை தங்களுக்கு சொந்தமானது. ஏனவே கடையை காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு