அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் இல்ல வரவேற்பு விழா

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.

காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள திருமூலஸ்தானத்தை சேர்ந்த அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் – மகாலட்சுமி தம்பதி மகள் ஜெயபிரியாவுக்கும், நெய்வேலி ஆர்ச் தில்லை நகர், என்.எல்.சி., முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் கொளஞ்சி - அமுதா தம்பதியர் மகன் அரவிந்த் திருமணம் கடந்த 2ம் தேதி வடலுாரில் நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதனை தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 3ம் தேதி காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் முருகுமாறன் முன்னிலை வகித்தார். காட்டுமன்னார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் வரவேற்றார்.

நிகழ்வில் ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் கானுார் பாலசுந்தரம், அவை தலைவர் குமார், பொருளாளர் தோப்பு சுந்தர், இணை செயலாளர் ரெங்கம்மாள், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் வசந்த், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், ஜோதி பிரகாஷ், அசோகன், பாலகிருஷ்ணன், ரங்கசாமி, நகர செயலாளர் செந்தில்குமார், பேரூர் செயலாளர்கள் எம்.ஜி.ஆர்., தாசன், பூமாலை கேசவன், தமிழரசன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் முருகையன், வர்த்தக அணி செயலாளர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் தோத்தாத்திரி, பிரஜித், கலியபெருமாள், அன்பழகன், பழனி, குகன்,  ரகுபதி உள்பட கட்சி நிர்வாகிகள், வர்த்தகர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.

 

Advertisement