இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை; ஐகோர்ட்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷின் படத்தில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1980ல் வெளியான நடிகர் ரஜினியின் முரட்டுக்காளை படத்தில் இளையராஜா இசையில் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் இடம் பெற்றிருந்தது. தனது பாடலை எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷின் படத்தில் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ஹேப்பி ராஜ் திரைப்படம் கடந்த மார்ச் 27ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 3 மாதத்திற்கு பிறகு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (12)
Prabu - Singampunari,இந்தியா
06 ஜூலை,2026 - 19:27 Report Abuse
இதன் பின் மாமா இருப்பார் . ஏற்கனவே பனிப்போர் . 0
0
Reply
Balasubramanian - ,
06 ஜூலை,2026 - 18:19 Report Abuse
இவை எல்லாம் நீர் குமிழி போல! இன்று தியாக ராஜ பாகவதர் பி யூ சின்னப்பா பாடல்களை கேட்க ஆள் இல்லை! அது போல இதுவும் காணாமல் போய் விடும்! அதற்குள் இவர் ஆடும் ஆட்டம் போனால் போகட்டும் போடா! 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
06 ஜூலை,2026 - 15:57 Report Abuse
இளையராஜா வுக்கு தனியாக ஒரு நீதிமன்றம் தேவை 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
06 ஜூலை,2026 - 13:58 Report Abuse
ரெட்ரோ பாடல்கள் என்கிற பெயரில் இப்போது பழைய பாடல்களை பயன்படுத்துகிறார்கள். பழைய பாடல்கள் எந்த இசையுடன் தாளத்துடன் வந்ததோ அதை விட்டு விட்டு இவர்கள் புதிய தாளத்திலும் இசையில் வெளியிடுவது கொஞ்சமும் சரியில்லை. அந்த பாடல்கள் ஹிட் ஆனதே அந்த தாளம் மற்றும் இசை. அதனால் அதன் புனிதம் கெடுதல் கூடாது. அதை அப்படியே பயன்படுத்தினால் தவறில்லை. தாளம், ராகம், இசையை மாற்றுவதில் என்ன இசை அறிவு இருக்கிறது ? 0
0
SULLAN - chennai,இந்தியா
06 ஜூலை,2026 - 16:18Report Abuse
இந்த உலகத்துல ஒரு ஏமாத்துக்காரன் அப்பாவி மக்களை ஏமாற்ற அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரே வார்த்தை ?? புனிதம்
எது புனிதம்?? எது தீட்டு?? ரெண்டுமே சுத்த ஹம்பக் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 ஜூலை,2026 - 12:45 Report Abuse
பாடலுக்கு படத்தின் producer இடம் இருந்து பணம் வாங்கியபின்பு அதற்கு யாராக இருந்தாலும் உரிமைகோர முடியாது. மொத்தத்தில் இளையராஜா ஒரு பேராசை பேர்வழி. 0
0
Venkatesan - Chennai,இந்தியா
06 ஜூலை,2026 - 15:53Report Abuse
யு ஆர் ராங் மை லார்ட். பாடல் மட்டும் தான் தயாரிப்பாளருக்கு சொந்தம் சட்டப்படி இசை இசைஅமைப்பாளருக்கே சொந்தம். இளையராஜா இசையை ஓ சி அடிக்கும் இன்றைய இசையமைப்பாளர்கள் ஏன் ரகுமான் பாடலை தொடுவதில்லை ? ஏன் என்றால் அண்ணனிடம் காப்புரிமை கச்சிதமாக உள்ளது. 0
0
Reply
Vasan - ,இந்தியா
06 ஜூலை,2026 - 12:09 Report Abuse
பாடல் வரிகளை உபயோகப்படுத்த கூடாதா, அல்லது அந்த பாடலின் இசையை உபயோகப்படுத்த கூடாதா?
அந்த பாடலை ரசிகர்கள் கேட்கலாமா, அல்லது அதற்கும் தடை விதிக்க பட்டுள்ளதா? 0
0
Raj Kamal - Thiruvallur,இந்தியா
06 ஜூலை,2026 - 17:53Report Abuse
யாரும் ரசிக்கலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். கல்யாண வீடு, வீட்டு விசேஷங்கள் திருவிழாக்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். யாரும் கேள்விகேட்க உரிமையில்லை. இளையராஜாவும் கேட்கமாட்டார். ஆனால் அவர் பாடல்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தி அதற்க்கு டிக்கெட் விற்பனை செய்தால் கண்டிப்பாக அவர் அதில் உரிமையும் பங்கும் கேட்பார். டிவி மற்றும் மற்ற ஒளி, ஓலி நிறுவங்களுக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவையெல்லாம் வியாபாரத்தில் வரும். எப்போது அவரை வைத்து நீங்கள் பணம் பார்கறீர்களோ அப்போது இளையராஜா கண்டிப்பாக உள்ளே வருவார். இது தான் சட்டம். இது அணைத்து இசையமைப்பாளர்களுக்கு பொருந்தும். 0
0
Vasan - ,இந்தியா
06 ஜூலை,2026 - 21:22Report Abuse
தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி. ராஜ் அவர்களே. 0
0
Premanathan S - Cuddalore,இந்தியா
06 ஜூலை,2026 - 21:55Report Abuse
சரியான கேள்விதான் கோர்ட்டுக்கு போகலாமே ஒரு ஐம்பது வருடம் கழித்து தீர்ப்பு வந்தாலும் வரலாம்.... 0
0
Reply
மேலும்
-
கோடம்பாக்கம், வியாசர்பாடி ஐவர் கால்பந்தில் ‘சாம்பியன்’
-
மாநில யு - 16 கிரிக்கெட் திருவள்ளூர் அணி வெற்றி
-
ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி
-
ஊத்துக்காடு பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
-
வெளியே தலைகாட்ட மறந்த 'மாஜி'க்கள் கடும் விரக்தியில் அதிமுக - திமுக
-
இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் :ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழக்கம்
Advertisement
Advertisement