மாநில யு - 16 கிரிக்கெட் திருவள்ளூர் அணி வெற்றி

சென்னை: சென்னையில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி, காஞ்சிபுரம் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி, ஆவடியில் நடந்து வருகிறது. அந்த வகையில், ஓ.சி.எப்., கிரி மைதானத்தில் நடந்த போட்டியில், திருவள்ளூர் அணி, காஞ்சிபுரம் அணியை எதிர்த்து மோதியது. போட்டியில் டாஸ் வென்ற காஞ்சிபுரம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த காஞ்சிபுரம் அணி 45 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய திருவள்ளூர் அணி வீரர்கள், 28வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

Advertisement