தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கு; ஆஜராகாத செந்தில் பாலாஜி
சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய வழக்கு தொடர்பாக, முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரரும் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக, தவெ எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசியதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரையில் பேரம் பேசியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர் விசாரணையில், தவெக ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அளித்திருந்தனர்.
இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்கும் ஆஜராகவில்லை.
பிரத்யேக வீடியோ!
டிமிக்கி கொடுத்த செந்தில்பாலாஜி; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (34)
Dum - ,இந்தியா
06 ஜூலை,2026 - 20:41 Report Abuse
சொரணை கெட்ட நீதி மன்றங்கள் 0
0
Reply
Tamilan - ,இந்தியா
06 ஜூலை,2026 - 19:20 Report Abuse
குதிரை பேரத்தில் படுதோல்வியடைந்த விரக்தியில் த வெ கவினர் தலை வால் புரியாமல் ஆடுகிறார்கள் அலைகிறார்கள். 0
0
Reply
krishna - ,
06 ஜூலை,2026 - 17:24 Report Abuse
ENNA SENTHIL BALAJI SIR OODI POYI TVK KATCHIYIL SERNDHAAL PUNIDHAR ASGI VIDUVIRGAL.MEENDUM TASMAC MINISTER AAGI BOTTILUKKU 10 ROOVAA SOLLI KALLA KATTUNGA.SUPERAA IRUKKUM. 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
06 ஜூலை,2026 - 16:54 Report Abuse
தலைவன் வீட்டில் தொண்டன் ஒழிந்து இருக்கப் போகிறான் ஊர் முழுவதும் தேடி அலைய வேண்டியதுதான். 0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
06 ஜூலை,2026 - 16:46 Report Abuse
பேண்ட் ல ஒண்ணுக்கு போன ஒண்டி வீரனிடமா உங்க போலீஸ் ஒண்ணும் செய்ய முடியாது.. 0
0
Reply
Rajesh - Bengaluru,இந்தியா
06 ஜூலை,2026 - 16:35 Report Abuse
மற்றுமொருவர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதிற்கு நம்ம வைகோ அவர்கள் நேரடி சாட்சியாக இருக்கிறார் . அவரை என்ன செய்யப்போகிறார்கள் அந்த மற்றுமொருவரை . 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
06 ஜூலை,2026 - 16:16 Report Abuse
ஆஜராகும் செந்தில் பாலாஜி அப்படீன்னு வந்தால்தான் நியூஸ். வரலைங்குறது ஒரு நியூஸே இல்லை. 0
0
Reply
Selvakumar Krishna - Abu Dhabi,இந்தியா
06 ஜூலை,2026 - 16:00 Report Abuse
இப்போது நடக்கும் குதிரை பேரத்தை பற்றி பேச எந்த ஊடக நாய்களுக்கும் துப்பு இல்லை, தற்குறி MLA வை வாங்கவுவதாக பொய் குற்றச்சாட்டு. 0
0
Reply
Venkatesan - Chennai,இந்தியா
06 ஜூலை,2026 - 15:57 Report Abuse
இதென்னடா திராவிட கட்சிக்கு வந்த சோதனை... ஏ வா வேலு சிங்கப்பூருக்கு ஓட்டம் நடந்தா உடம்பு கூட கூட வருதாம் அதுக்கு ட்ரீட்மெண்ட், சின்ன கேசரி துபாய்க்கு ஓட்டம்... எதுக்குன்னே தெரியாது, செந்தில்பாலாஜி மற்றும் அவன் தம்பி தப்பியோட்டம்.... ஆளாளுக்கு ஒரு திசைல ஓட்டம்... 0
0
Reply
Nandakumar Naidu - ,
06 ஜூலை,2026 - 15:47 Report Abuse
இவனுங்க எப்போது சட்டத்தை மதித்திருக்கிறார்கள்? தூக்கி உள்ளே போட்டு நாலு மிதி மிதிக்க வேண்டும். 0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
-
கோடம்பாக்கம், வியாசர்பாடி ஐவர் கால்பந்தில் ‘சாம்பியன்’
-
மாநில யு - 16 கிரிக்கெட் திருவள்ளூர் அணி வெற்றி
-
ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி
-
ஊத்துக்காடு பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
-
வெளியே தலைகாட்ட மறந்த 'மாஜி'க்கள் கடும் விரக்தியில் அதிமுக - திமுக
-
இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் :ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழக்கம்
Advertisement
Advertisement