டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது: அண்ணாமலை திட்டவட்டம்
நமது சிறப்பு நிருபர்
''திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது. தவெக அரசுக்கு ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்'' என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
குறுக்கு விசாரணை
பிறகு படிப்படியாக குறுக்கு விசாரணை வரை சென்று விட்டது. பிறகு அந்த நபரே கோர்ட்டுக்கு வந்து இந்த வழக்கை நாங்கள் வாபஸ் வாங்குகிறோம் என்று சொல்கிறார். அவர் வாபஸ் வாங்கியதால் அண்ணாமலை சமரசம் செய்து விட்டாரா என்கின்றனர். அப்போதுதான் நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு அறிவை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். யாரோ ஒருவர் என் மீது வழக்கு பதிவு செய்கிறார். வழக்கை பதிவு செய்தவர், அதை வாபஸ் வாங்கினால், வழக்கை பதிவு செய்தவருக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்.
வழக்கை பதிவு செய்தவர் எப்பொழுது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம், அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கு நடக்க, நடக்க கோர்ட்டில் அவர் எதையோ சொல்கிறார். நான் கோர்ட்டில் அங்கேயே சொல்கிறேன். என் மீது அவதூறு பரப்புகிறார் என்றேன், அங்கேயே மறுபடியும் அவதூறு வழக்கு பதிவு செய்வேன் என்றேன். கோர்ட்டுக்குள் பேசுவது பொதுவெளியில் பேசுவது கிடையாது, என்றார். நான் 50 பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், எனது மனது கஷ்டமாக இருக்கிறது என்று வாதிட்டேன். என் மீது அவதூறு பரப்புகிறார் என்று சண்டை போட்டேன். அந்த வழக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
சமரசமில்லை
எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையில் பேசுவது குறித்து வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருப்பதாக கூறினார். நான் பதிவு செய்த வழக்கும் நண்பர் ஆகாமல் இருக்கிறது. தற்போது எந்த வழக்கை டிஆர்பாலு வாபஸ் பெற்றுள்ளார். இந்த வழக்கில் சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதுவரைக்கும் நான் யாரை என்ன பேசினேனோ, அது உண்மை. தொடர்ந்து பேசுவேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனை சந்தித்துக் கொள்ளலாம். எதற்காக இதை சொல்கிறேன் என்றால், கரப்ஷனை எப்பொழுதும் தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறேன்.
ரொம்ப மகிழ்ச்சி
தமிழகத்தில் கரப்ஷன் கட்டுக்குள் வருகிறது என்றால் ஒரு நாகரிக குடிமகனாக ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. எந்த ஒரு அரசு வந்தாலும் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்களே ஒரு புதிய கம்பெனிக்கு சென்றால், ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் நன்றாக வேலை செய்வதற்கு காலம் அவகாசம் தேவைப்படும். இன்னைக்கு என்னுடைய சிந்தனை என்னவென்றால் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். நாம் சப்போர்ட் செய்வோம். நன்றாக வேலை பார்க்கட்டும். தடைகளை போட வேண்டாம். எந்த விஷயத்தை சொன்னாலும் கூட அறிவுறுத்துகிறோம், சொல்கின்றோம். இதை பாருங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உங்கள் ஆட்களிடம் பேசுங்கள் என்று தான் நாம் சொல்கிறோம்.
அவர்கள் பாவம்
இன்றைக்கு தமிழ்நாடு புரையோடிப் போய்விட்டது. இங்கிலாந்து அரசியல் மாறி இவ்வளவு இடைவெளி இருக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் சம்பந்தமே இல்லை. மாற்றுவது அவ்வளவு எளிது கிடையாது. ஒரு வருடம் கால அவகாசம் தேவை. புதிய அரசில் அமைச்சர்களாக உள்ள பாதி பேர், அவர்கள் இதுவரைக்கும் கவுன்சிலராக கூட இருந்தது கிடையாது. இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் பாவம். அவர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் எவ்வாறு வேலை செய்வார்கள். அவர்களுக்கு லெப்ட் என்ன, ரைட் என்ன, இன்கமிங் என்ன, அவுட்கோயிங் என்ன, என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவே ஆறு மாதம் ஆகும். இதனால் இன்றைக்கு நாம் எல்லோரும் அந்த நேரம் கொடுக்க வேண்டும்.
நல்லது செய்தால்...
தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால், முதல் ஆளாக நாம் எப்பொழுதுமே வரவேற்க போகிறோம். கரப்ஷனை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களை வரவேற்க போகிறோம். தினமும் செய்தியாளர்களை பார்த்து என்ன செய்யப் போகிறார்கள். இன்னைக்கு செய்தியாளர்களை பார்த்து உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா என்று கேட்கலாம்.
செய்தியாளர் உங்களைப் பார்த்து உங்க வீட்டில் நல்லா இருக்கிறார்களா என்று கேட்கலாம். இந்த இரண்டைத் தவிர நீங்கள் என்ன கேட்க முடியும். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அரசுக்கு நேரம் கொடுக்க வேண்டும். நிறைய தலைவர்களை உருவாக்குவோம். நம்பிக்கையுடன் வந்திருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தமிழ்நாட்டில் கரெப்சன் கட்டுக்குள் வருகிறதா? யார் சொன்னது இவரிடம்? அண்மையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் த.வெ.க காரர்களே எழுப்பியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிந்துமா இவர் இவ்வாறு கூறுகிறார்?
அடுத்த சனிகிழமை பனையூர் ஐக்கியமா ?
நீங்கள் பேசும் தமிழியம் உங்கள் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது.பேசாமல் விஜய் அல்லது சீமானுடன் சேர்ந்து விடுங்கள்.
வசூலில் எந்த சமரசமும் கிடையாது
அண்ணாமலைக்கு அண்ணாதுரை ,நெடுஞ்செழியன் ,கருணாநிதி அன்பழகன் பேச்சுக்கள் கிடைத்தால் டிஜிட்டல் செய்துவைத்து கேளுங்கள் .உங்களுக்கே சில வெற்றியின் ரகசியம் புரியும் .
ஒண்ணு என்ன அஞ்சு வருஷம் கூட கொடுக்கலாம். அதுக்குள்ள நீங்க அஞ்சாறு படத்துல நடிச்சிட்டு வந்தா தேர்தல்ல ஓட்டுக் கிடைக்க வசதியா இருக்கும். டுமீல் மக்களுக்கு என்றென்றும் சினிமாவுக்கும் நிதர்சன வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாது. கனவுலகில் வாழப் பிறந்தவர்கள்.
நீதிமன்றத்திலேயே வழக்குபதிய சொல்லி கேட்டேன் என்கிறீர்கள் .அதெப்படி முடியும் .?ஒரு கிரிமினல் வழக்கு பதியவேண்டுமானால் முதலில் காவல்துறை தான் விசாரித்து எந்தசட்டப்பிரிவின் கீழ் குற்றம் என்று பதிவர்கள் .குடியியல் அல்லது உரிமையியல் மீறலாக இருந்தால் வழக்கறிஞ்சர் உதவியுடன் வேண்டிய பதிவுகளை நீதிமன்றத்தின் சமர்ப்பிக்கவேண்டும் .அவ்வாறன்றி வேறு எந்த வழியில் பதிவு செய்யமுடியும் .சட்டம் அறிந்த நீங்கள் இதை வெளியில் சொல்வதே தவறு.
தவெகவை ஆதரிப்பது இந்துத்துவாவிற்கு எதிராக செயல்படுவது என இரண்டும் தனது முக்கிய கொள்கைகள் என அண்ணாமலை நினைத்தால் அது மிக தவறு. அவரை ஆதரித்து குரல் கொடுக்க தயாரான என்னை போன்ற பலரும் இதை ஏற்று கொள்ள மாட்டார்கள். இது எங்களுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் செய்தி. . கட்சிக்கு என சட்ட விதிகளும் இல்லத கட்சியான தவெக ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலை கூட தன்னுடைய விருப்பத்திற்கேற்ப மாற்றி அதை முழு கேலிக்கூத்தாகி விட்டதை அண்ணாமலை எப்படி அங்கீகரிக்கிறார் என புரியவில்லை. ஆனால் தேர்தல் ஆணைய விதிகளின்படி கட்சியை நடத்தி வருவதோடு கட்சி தேர்தல்களையும் கூட முறையாக நடத்தியது திமுக என்பதை அண்ணாமலை மறக்க கூடாது. திமுகவிற்கு மாற்று தவெக என அவர் நம்பினால் அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்குமே அன்றி அவருக்கு ஆறுதலாக குரல் கொடுத்த பத்தொன்பது லட்சம் ஆதரவாளர்களும் அதையே ஏற்று அதையும் அவரையும் ஏற்பார்கள் என அவர் எதிர்பார்க்க கூடாது.
மற்ற எல்லோருமே ஒரு அரசியல் நாகரிகத்திற்காக அரசை விமர்சிக்க ஒரு ஆறு மாதம் டைம் கொடுப்பார்கள். அண்ணாமலை மட்டும் என்ன விஜய்க்கு ஒரு வருடம் டைம் கொடுக்கிறார்? ரொம்பதான் பாசம் அண்ணாமலைக்கு விஜயண்ணா மேல!
ஒரு வருடத்தில் தமிழர்கள் தலை யை வைத்து தலைகீழாய் நடப்பார்கள்.மேலும்
-
கோடம்பாக்கம், வியாசர்பாடி ஐவர் கால்பந்தில் ‘சாம்பியன்’
-
மாநில யு - 16 கிரிக்கெட் திருவள்ளூர் அணி வெற்றி
-
ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி
-
ஊத்துக்காடு பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
-
வெளியே தலைகாட்ட மறந்த 'மாஜி'க்கள் கடும் விரக்தியில் அதிமுக - திமுக
-
இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் :ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழக்கம்