இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு 6 நாள் பயணம்; பிரதமர் மோடி இணையத்தில் பதிவு

7


புதுடில்லி: இந்தோனேசியா,ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 6 நாள் பயணமாக புறப்பட்டு சென்றார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரை பயணம் மேற்கொண்டு உள்ளார்.
புதுடில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

அவர் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பேச்சு நடத்த உள்ளார். இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டு சென்றார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அடுத்த சில நாட்களில், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவுள்ளேன். இருநாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவதும், வருங்காலத்தில் நமது நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த பயணத்தின் நோக்கமாகும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


சிறப்பு வீடியோ!

3 நாடுகளில் சுற்றுப்பயணத்தை துவங்கினார் பிரதமர் மோடி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement