கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: திமுகவின் வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டில்லி சிறப்பு நிருபர்
கரூரில், 2025 செப்டம்பர், 27ல், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.
திமுக வழக்கு
இந்நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது, சாட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் செயல். முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, சுப்ரீம்கோர்ட்டில், தி.மு.க., சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளை விசாரணை
இந்த வழக்கை நாளை (ஜூலை 07) விசாரிப்பதாக சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது. இதற்கிடையே வரும் ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூருக்கு சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இந்தசூழலில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும் போது, முக்கிய உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
கல்லா கட்ட மற்றொரு வாய்ப்பு இந்த அநீதி பதிகளுக்கு .
இந்த வழக்கு எப்போதுதான் முடியும் என்று யாராவது சொல்ல முடியுமா? அந்த வழக்கை நடத்தும் உச்ச நீதி மன்றத்தாலேயே சொல்ல முடியாது அதற்குள் எவ்வளவோ குல்மால் நடந்து வழக்கு திசையே மாறிவிடும் வழக்கு தாமதம் ஆனால் நீதி என்பது சரியாக வெளி வராது என்பதே பழமொழி அதற்கே ஏற்ப இந்த வழக்கு திசை மாறும் கடைசியில் ஒன்றுமே இல்லை என்றுதான் வரும்
ஓய்வு நீதிபதி மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் என்பது ஒரு பெரிய அமைப்பு. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றம் விசாரிப்பது ஓய்வு நீதிபதிக்கு மன அழுத்தம் தரும். அவதூறு என்றால் உள்ளூர் போலீசிடம் புகார். நிர்வாக, சட்ட ஒழுங்கு பிணைப்பு இல்லை. சூழ்நிலை முடிவு. சட்டத்திற்கு உட்படாதவற்றை அதிகம் உச்ச நீதிமன்றம் விசாரிப்பது அவசியம் இல்லை. மாவட்ட நீதிமான்கள் விசாரிக்க வேண்டிய வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க முயல்வதை மத்திய அரசு முறை படுத்த முடியாமல் முழுகிறது. நீதி, நிர்வாகம், அரசுக்கு மிக பெரிய இடைவெளி கூடாது.
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை. கரூர் சம்பவம் நடந்த அன்றே தி.மு.க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால் அதன் பலன் இன்று த.வெகவிற்கு போய் சேர்ந்து விட்டது. பழனிச்சாமி வேற ஓவரா அந்த நேரத்தில் விஜய்க்கு சப்போர்ட் செய்தார். அதன் பலனை இருவருமே இன்று அனுபவிக்கிறார்கள். வழக்கு முடியும் வரை பொது வெளியில் பேசக் கூடாது என்று மட்டுமே உச்ச நீதி மன்றம் தனது கருத்தினை சொல்லும். வேறு எதுவும் சொல்லப் போவதில்லை. ஆதவ் அர்ஜுனா பேசியது பேசியது தான்.
திட்டம் போட கொலை அல்ல. எதிர்பாரா மக்கள் கூட்டம். ஏற்பாட்டாளர்களின் கைமீறிய நிலைமை. பதட்டத்தில்
நெரிசலில் முண்டியடித்து வெளியேறத் துடிக்கும் மக்கள். கும்மிருட்டில் சிக்கிய பரிதாபம்.
போலீஸ் பற்றாக்குறையா என்று கேட்கிறார்கள்.
கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு 1. அப்போதைய காவல்துறைப் பொறுப்பை வைத்திருந்தவர் .... 2. கூட்டத்தை நடத்தியவர் ..... இருவருமே இன்றுவரை விசாரிக்கப்படவில்லை ..... தண்டிக்கப்படவில்லை ....
திராவிட பசங்களுக்கு பயம். மடியில் கனம் இருக்கு. உச்ச நீதிமன்றத்திற்கு காவடி.
தி மு க தாக்கல் செய்த வழக்கு என்றால் உடனே பொங்கி கொண்டு மறு நாளே விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்து விட்டது
கோகுல நன்றி..உள்ளூர் பிரச்சனைக்கு கருத்து போட்டதற்கு
திமுக - பாஜக எதிர்காலத்தில் கூட்டணி வைக்கும் என்றே உச்சநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துள்ளது... அப்படித்தானே.....?
கோர்ட் தடை விதிக்கவேண்டும் . சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது .மேலும்
-
கோடம்பாக்கம், வியாசர்பாடி ஐவர் கால்பந்தில் ‘சாம்பியன்’
-
மாநில யு - 16 கிரிக்கெட் திருவள்ளூர் அணி வெற்றி
-
ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி
-
ஊத்துக்காடு பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
-
வெளியே தலைகாட்ட மறந்த 'மாஜி'க்கள் கடும் விரக்தியில் அதிமுக - திமுக
-
இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் :ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழக்கம்