நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது திராவிட கட்சிகளின் தோல்வி: அன்புமணி

5

சென்னை: நீர் திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது திராவிட கட்சிகளின் தோல்வி என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.




காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனுமிடத்தில் அணை கட்டியே தீரும் என்ற பிடிவாதத்தில் கர்நாடகா அரசு இருந்து வருகிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, இந்தத் திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், இதனைப் பொருட்படுத்தாத கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக - கர்நாடகா எல்லையான ஒகேனக்கல்லின் பிலிகுண்டுவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நடைபயணத்திற்கு நடுவே, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை சந்திக்க அன்புமணி சந்தித்து பேசினார். அப்போது,மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஒரு மணி நேரம் தமிழகத்தின் நீர் திட்டங்கள், அடுத்த 50 ஆண்டு அரசு என்ன செய்ய வேண்டும் என ஆலோசனைகளை தெரிவித்தோம். கருத்துகளை பகிர்ந்தோம். ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடந்தது.

எங்களின் கருத்துகளை கேட்ட அரசிற்கு வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். காவிரி குண்டாறு திட்டம் குறித்து பேசினோம். காவிரி ஒகேனக்கல்,
அரியலூர் சோழர் பாசன திட்டம் குறித்தும் பேசினோம்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் 2வது கட்டம், கொங்கு பகுதிக்கு வளம் சேர்க்கும் திட்டம். அத்திட்டம் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தோல்வியடைந்த திட்டம் அல்ல வெற்றி பெறாத திட்டம். பாதி தான் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.10 -12 திட்டங்கள் குறித்து விரிவாக பேசினோம். அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.


ஆக்கப்பூர்வமாக அரசு செய்து வருகிறது. 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் மிகப்பெரிய தோல்வி என்பது நீர் மற்றும் நீர்மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுகு்காதது திராவிட கட்சி களின் மிகப்பெரிய தோல்வியாக பார்க்கிறேன்.தமிழகத்தின் பாசன பரப்பு 45 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பு குறைந்துள்ளது. நீர்மேலாண்மை திட்டம் முக்கியத்துவம் குறைந்துள்ளது. நீர்மேலாண்மையில் முக்கியத்துவம்கொடுத்தால் தான் அதில் முதலீடு செய்தால் தான் நீர் பிரச்னை இருக்காது.

தமிழகத்தில் உள்ள 27 ஆயிரம் ஏரிகளில் ஒரு மீட்டர் தூர்வாரினால், 200 டிஎம்சி கொள்ளளவு தண்ணீர் சேமிக்கலாம். பருவநிலை மாற்றத்திற்கு கடன் வழங்க உலக வங்கி ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவை கடன் கொடுக்க தயாராக உள்ளன.தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்,10 ஆண்டுகளில் நீர் மேலாண்மை திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். நீர்மேலாண்மை திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கினால் தான், வளம் பெரும்.


தமிழகம் அதிகமான நகரமயமாகி வருகிறது. 55 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். இது அரசின்தோல்வி. கிராமத்தில் தண்ணீர், விவசாயம், வாழ்வாதாரம் இ ல்லாத காரணத்தினால் மக்கள் நகரங்கள் நோக்கி வருகின்றனர். மக்கள் கிராமங்களை நோக்கி சென்றால் தான் அரசுக்கு வெற்றி.


காவிரி, மேகதாது பிரச்னை குறித்து பேசினோம். மேகதாது பிரச்னைக்காக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அத்தனை சட்டசபை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் டில்லி சென்று, திட்டத்தை நிறுத்த வேண்டும் என பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரைவலியுறுத்த வேண்டும் என்று சொன்னோம்.

காவிரிநடுவர் மன்றம் குறித்து விளக்கம் அளித்தனர். அது ஏற்புடையது அல்ல. மேகதாதுவை ஏற்காத போது நடுவர் மன்றத்தை ஏற்க மாட்டோம். தேவையற்றது. மேகதாது அணைக்கு எதிராக நிறைய வழக்குகள் போட வேண்டும். 12,500 ஏக்கர் வனத்தை அழித்து அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். 3 சரணாலயங்கள் உள்ளது. புலிகள் சரணாலயம் உள்ளது. பழமையான மரங்களை அழித்து அணை கட்ட போகின்றனர். வெவ்வேறு வகையில் மனுக்கள் போட வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் நேரலை



அமைச்சர் ஆனந்த்தை சந்தித்த பிறகு, பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டி தினமலர் சமூக வலைதளம் மற்றும் இணையதளம் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைக் காண:
https://www.youtube.com/watch?v=ywBGYNS85x4


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

கோட்டைக்கு வந்த அன்புமணியை வாசலுக்கு வந்த வரவேற்ற அமைச்சர் ஆனந்த்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement