தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி, ஜூலை 7–

கவரைப்பேட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

பெரியபாளையம் அடுத்த ஆரணி, அகரம் பகுதியில் வசித்தவர் திலிப், 18. நேற்று முன்தினம், தச்சூரில் இருந்து புதுவாயல் நோக்கி, யமஹா எம்.டி., பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், போரக்ஸ் நகர் அருகே சென்றபோது, சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயம் அடைந்த அவர், அதே இடத்தில் பலியானார், கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement