ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
சென்னை: விமானத்தில் கடத்தி வந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆசிய நாடான தாய்லாந்தில் இருந்து வரும் விமானத்தில், கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் விமானங்களை கண்காணித்தனர். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று திரும்பியது தெரியவந்தது. அவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை மடக்க விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, அவரது உடைமைகளை பரிசோதித்ததில், சூட்கேசுக்குள் மறைத்து 3 கிலோ கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், யாருக்காக கடத்தி வரப்பட்டது என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர் நலச் சங்கம் வலியுறுத்தல்
-
இரட்டைக் கொலை: மேலும் இருவர் கைது
-
மூணாறில் நிலச்சரிவு அபாயம்: பயணிகள் வருவதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
-
பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு அலைபேசி செயலி வழி முன்பதிவு
-
சுற்றுலா வேன்-கார் மோதல்: ஒருவர் பலி; 14 பேர் காயம்
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்த கட்டுமானத்திற்கும் அனுமதியில்லை: பட்டா காடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் திட்டம்