மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: சென்னை அணியினர் சாம்பியன்

சென்னை: மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை அணியினர் சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் இருபாலருக்குமான 3வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.

இதில், தமிழகத்தின் பல மாவட்டங்களின் கிளப் அணிகள் போட்டியிட்டன. சென்னை சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட கிளப் அணிகள் போட்டியிட்டன.

இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னை ஆர்.டி.டி.எச்.பி.சி., கிளப் அணி வீரர் உமேஷ், 18, சக வீரரான தருண், 22, என்பவரை, 11 - 8, 14 - 12, 8 - 11, 11 - 13, 11 - 9, 7 - 11, 11 - 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

அதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆர்.டி.டி.எச்.பி.சி., அணியின் செலீனா, 25, சென்னை மயிலாப்பூர் கிளப் அணியின் சிவானி, 19, என்பவரை எதிர்த்து போட்டியிட்டார். இதில் அசத்திய செலீனா, சிவானியை 11 - 5, 5 - 11, 11 - 3, 11 - 2, 12 - 10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Advertisement