அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி, ஜூலை 7–

கவரைப்பேட்டை அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையோரம் நடந்து சென்றவர் உயிரிழந்தார்.

கவரைப்பேட்டை அருகே, சேர்ப்பேடு கிராமத்தில் வசித்தவர் எம்ஜிஆர், 57. நேற்று முன்தினம், அய்யர்கண்டிகை கிராமத்தில் இருந்து, கண்லுார் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், விபத்து குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement