இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர் நலச் சங்கம் வலியுறுத்தல்
சிவகாசி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2013 முதல் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர் நலச்சங்க மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி கூறினார்.
சிவகாசியில் அவரளித்த பேட்டி: 2013 முதல் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள் பதவி உயர்வுக்காக 14 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை உள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும். அதன் பின் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
பள்ளிகளில் இளநிலை உதவியாளர்கள் இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பள்ளி மேலாண்மை குழு மூலம் பணியிடம் நிரப்பப்படுமோ அதேபோல் இளநிலை உதவியாளர் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே இளநிலை உதவியாளர்களுக்கு தகுதி காண் பருவம் முடிந்து ஆணை வழங்க வேண்டும். அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு வினியோகம் செய்வதில் நிர்வாக சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அரபு நாடுகளிலிருந்து வந்த ஆர்டர்கள்; மீள்கிறது பொள்ளாச்சி தேங்காய் ஏற்றுமதி
-
விழிஞ்ஞம் துறைமுக பங்கு விற்பனை; பினராயி எதிர்ப்பு
-
ஏற்றுமதி பொருட்களின் தயாரிப்பிட சான்று; புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு
-
வான்வழி அமைப்பு மையத்தை ஓசூரில் அமைக்கிறது 'டிட்கோ'
-
எண்ணுார் எல்.என்.ஜி., முனையம்; ரூ.3,400 கோடியில் விரிவாக்க அனுமதி
-
கடந்த நிதியாண்டு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி முதலிடம் பிடித்தது தமிழகம்; ரூ.5.63 லட்சம் கோடி தொட்டது