சுற்றுலா வேன்-கார் மோதல்: ஒருவர் பலி; 14 பேர் காயம்
தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் கார் டிரைவர் பலியானார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவர் சுரேஷ் 30. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 18 பேருடன் வேளாங்கண்ணி சுற்றுலா சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினார். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் பாலம் பகுதியில் சென்ற போது துாத்துக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியது.
இதில் சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் அசோக்குமார் 30, சம்பவ இடத்திலேயே இறந்தார். வேனில் பயணித்த 14 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரபு நாடுகளிலிருந்து வந்த ஆர்டர்கள்; மீள்கிறது பொள்ளாச்சி தேங்காய் ஏற்றுமதி
-
விழிஞ்ஞம் துறைமுக பங்கு விற்பனை; பினராயி எதிர்ப்பு
-
ஏற்றுமதி பொருட்களின் தயாரிப்பிட சான்று; புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு
-
வான்வழி அமைப்பு மையத்தை ஓசூரில் அமைக்கிறது 'டிட்கோ'
-
எண்ணுார் எல்.என்.ஜி., முனையம்; ரூ.3,400 கோடியில் விரிவாக்க அனுமதி
-
கடந்த நிதியாண்டு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி முதலிடம் பிடித்தது தமிழகம்; ரூ.5.63 லட்சம் கோடி தொட்டது
Advertisement
Advertisement