கடந்த நிதியாண்டு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி முதலிடம் பிடித்தது தமிழகம்; ரூ.5.63 லட்சம் கோடி தொட்டது

சென்னை: கடந்த நிதியாண்டில், பொருட்கள் ஏற்றுமதியில் நாட்டிலேயே தமிழகம் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள் வருமாறு:

கடந்த 2025--26 நிதியாண்டில், தமிழகத்தின் மொத்த பொருட்கள் ஏற்றுமதி 5.63 லட்சம் கோடி ரூபாய். இது, முந்தைய ஆண்டை விட 13.7 சதவீதம் அதிகம். உலகளவில் வர்த்தக பதற்றம் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் நிலவிய நிலையிலும், தமிழகம் இந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம், நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்த பிரிவில் ஏற்றுமதி, கிட்டத்தட்ட 1.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 36 சதவீதம் அதிகம். ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியிலும் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்த ஏற்று மதியில் குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. இதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், 2021--22 நிதியாண்டில் 8.50 சதவீதமாக இருந்த தமிழகத்தின் பங்கு, தற்போது 13.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 42 சதவீதம்  2.51 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதியுடன் காஞ்சிபுரம் மாவட்டம், நாட்டில் 2ம் இடம்  3.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன், குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டம் முதலிடம்

Advertisement