எண்ணுார் எல்.என்.ஜி., முனையம்; ரூ.3,400 கோடியில் விரிவாக்க அனுமதி
சென்னை: சென்னை எண்ணுாரில் உள்ள இந்தியன் ஆயில் எல்.என்.ஜி., முனையத்தை, 3,400 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கும் திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ வடிவில் வரும் எரிவாயு, இந்த முனையத்தில் மீண்டும் வாயு வடிவமாக மாற்றப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் நகர எரிவாயு வினியோகத்துக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது இந்த முனையத்தின் திறன் ஆண்டுக்கு 50 லட்சம் டன்னாக உள்ளது. விரிவாக்கத்துக்கு பின், இது 1 கோடி டன்னாக உயரும்.
இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள், மின் நிலையங்கள், உர ஆலைகள் மற்றும் நகர எரிவாயு நிறுவனங்களுக்கு கூடுதல் எரிவாயு கி டைக்கும்.
மேலும், கப்பல்களுக்கு எல்.என்.ஜி., எரிபொருள் வழங்குதல், அண்டை நாடுகளுக்கு எரிவாயு அனுப்புதல் போன்ற வாய்ப்புகளும் உருவாகும் என திட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பருவமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மருத்துவ விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
-
கள்ளக்குறிச்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
-
மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
-
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் அலட்சியம் காட்டும் போலீசார்
-
அத்துமீறி வீடு புகுந்த நபர் போலீசில் பெண் புகார்