2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைவு


சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 13,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,700 ரூபாய்க்கும், சவரன், 1,09,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்று கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே விற்பனையாகின.


நேற்றைய நிலவரம்




நேற்று (ஜூலை 6), தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் குறைந்து, 13,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,120 ரூபாய் சரிவடைந்து, 1,08,480 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (ஜூலை 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 13,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்துள்ளது.


வெள்ளி நிலவரம்




வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


வீடியோ பார்க்க....

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து அறிந்து கொள்ள வேண்டுமா?

தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement