திமுகவுக்கு மூக்குடைப்பு; கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
- டில்லி சிறப்பு நிருபர் -
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் பேச தடை விதிக்க வேண்டும் என்று கோரி திமுக தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது. பிறகு மனுவை திமுக வாபஸ் பெற்றது.
திமுக மனு
இந்த சூழலில், சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதில், 'கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது, சாட்சிகளை அச்சுறுத்தும் செயல்.
'இந்த செயல் சி.பி.ஐ.,யின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம்கோர்ட் நீதிபதி அசானுதீன் அமானுல்லா தலைமையிலான விடுமுறை கால சிறப்பு அமர்வில், தி.மு.க., முறையிட்டது.
விசாரணை
இந்த வழக்கு இன்று (ஜூலை 07) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விஸ்வநாதன், அலோக் ஆராதே அமர்வு முன் விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணை தொடங்கியதும், ''நீங்கள் பேச்சு சுதந்திரத்துக்கு தடை கேட்கிறீர்களா? அவர்கள் பேசினால், அதை எதிர்த்து நீங்களும் பேசலாமே? இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்,'' என்று திமுக தரப்பு வக்கீலிடம் நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
திமுக தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார், ''குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம், அரசு வேலை வழங்குவதாக கூறி, இந்த வழக்கில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அது வழக்கு விசாரணையை பாதிக்கும். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் பேசக்கூடாது,'' என்றார்.
நீதிபதி விஸ்வநாதன், ''முதல்வரின் செய்தியை சுப்ரீம் கோர்ட் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நிவாரண உதவி, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது எப்படி வழக்கு விசாரணையை பாதிக்கும்,'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு திமுக வக்கீல் ரஞ்சித் குமார், ''இந்த வழக்கில் முதல்வர் விஜய் தான் முதல் குற்றவாளி. அரசின் தலைவராகவும் இருக்கிறார்,'' என்றார்.
அதற்கு நீதிபதி விஸ்வநாதன், ''''இந்த வழக்கில் முதல்வர் குற்றவாளி கிடையாது. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் இல்லை. ஆனால் இன்று இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்குகிறீர்கள், அது எப்படி,'' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு திமுக தரப்பு வக்கீல் முன் வைத்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. நீதிபதி விஸ்வநாதன், ''நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்த மனுவை, நீங்கள் வலியுறுத்தாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. இந்த மனுவை தள்ளுபடி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்,'' என்றார்.
இதன்பிறகே, திமுக தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார், தாங்கள் மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார்.
திமுகவுக்கு பின்னடைவு
தமிழக முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி, வேலை வாய்ப்பு போன்றவற்றை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நிகழ்வின்போது, கரூர் நெரிசல் துயர சம்பவத்தில் என்ன நடந்தது என்று முதல்வர் விரிவாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முதல்வர் அல்லது அமைச்சர்கள் பேசினால், தங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சியே திமுக தரப்பில் இப்படி ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இது, திமுகவுக்கு அரசியல் ரீதியாக ஏற்பட்ட மூக்குடைப்பு என்றே கருதப்படுகிறது.
பிரத்யேக வீடியோ!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம்கோர்ட் சென்றும் தோற்றது திமுக; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
நிவாரண உதவி கருணையின் அடிப்படையில் அளிக்கக்கூட இவர்களுக்கு மனம் வரவில்லையா அதர்க்கு கூட தடை விதிக்க நீதி மன்றம் செல்ல வேண்டுமா நீதிபத்ஜிக்கல் சரியாக இவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார் மக்களே இவர்களின் எண்ணத்தை முழுதும் இப்போதாவது புரிந்துகொள்ளுக்கள் இவர்கள் நடத்தியது நடத்துவது அரசியல் கட்சியா அல்லது அரசியலில் மக்கள் விரோத கட்சியா என்றே தெரியவில்லையே ஆர்.எஸ்.பாரதி - வில்சன் இவர்கள் இருக்கும்வரை இந்த ஆண்ட கட்சி மேலே எழும்பவே முடியாது கட்சியை குழிதோண்டி புதைக்கதான் இவர்கள் முயற்சி செய்வார்கள்
dmk legal wing is pretty weak confused
உலக அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர் அணிகளிலேயே மிகவும் சக்திவாய்ந்த வில்சன் ஐயா தலைமையிலான திமுக அணிக்கே இப்படி ஒரு பின்னடைவா. ? என்ன சரவணா இது.
அட உப்பி.. அவர் தாமதமாக வந்தார் ஆனா அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள்ளதான வந்தார் .. அதுவரைக்கும் காவல்துறைதான கூட்டத்தை கட்டுக்குள் வைக்கணும் ?? இல்லன்னா என்ன ___க்கு அவங்ககிட்ட அனுமதி கேக்கணும் ?? இது சதிதான் .. அதனாலதான் 10 ஓவா பால்காரன் மாறுவேஷத்துல அலையிறான்
பத்து ரூபாய் காரர்களை முடிந்தால் உயிரோடு அல்லது சுட்டு பிடிக்க வேண்டும். தவிர திருட்டு தீயமுக இந்த கேடுகெட்ட அரசியல் நாடகத்தை உச்ச நீதிமன்றத்தில் நடத்த முயற்சித்துள்ளது. இல்லாத முதல் குற்றவாளியை இவர்களே முதலமைச்சர் விஜய் என்று உருவகப்படுத்தி புனைக் கதைகளை நீதிமன்றத்தில் அவிழ்த்து விட முயன்றுள்ளனர். நீதிமன்றம் தீயமுக வாதிகளுக்கும் அவர்கள் சார்பில் தவறான கருத்துக்களை நீதிமன்றத்தில் பதிவிட துணிந்த வக்கீலுக்கும் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இன்னும் தீயமுகவின் கொட்டம் அடங்கவில்லை. அடக்கி அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.
தினமலர் நிருபருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அடியேனுக்கு சின்ன ஆசை. மூக்குடைப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை மூக்கறுப்பு என்று சொல்லியிருந்தால் சாலப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனா திருட்டு தீயமுக காரனுங்க இதை திருட்டு தீயமுக அறுவாலய ஹெட் கிளார்க் குக்கு மூக்குடைப்பு. தீயமுகவுக்கு இல்லை ன்னு சப்பை கட்டு கட்டுவானுங்க. களவாணிங்க.
விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததுதான் கூட்ட நெருக்கடி ஏற்பட முதல் காரணம் . கூட்ட நெருக்கடி ஏற்பட்டதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது . இந்த சம்பவம் விபத்து அல்ல அலட்சியம் என்பது உறுதியானால் விஜய் தானே முதல் குற்றவாளி . பொறுமை காப்போம் . சிபிஐ விசாரணையின் முடிவில் நீதி கிடைக்கும் .
அரைவேக்காடு ராஜேஷ்...உனக்கு அதில் பங்கு இருக்கு போல...லாடம் கட்டினால் சரியாகும்
லாடம் கட்டுவியா . லாடம் குதிரைக்கு தானடா கட்டுவாங்க . குதிரை பேரம் பார்த்து பார்த்து குதிரையாவே மாறிட்டியா . பதில் சொல்ல திராணி இல்லைனா எதுவேண்டுமானாலும் பேசுவது . முழுவேக்காடு .
க்ரீஷ்க்கு அப்ளாஸ். பள்ளம் வெட்டி வச்சிருந்தது.அந்த பள்ளத்துக்குள்ள மக்களை தள்ளி உட்டது எல்லாமே தற்குறிங்கன்னு சொன்ன தற்குறிங்கதான் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்து விடும். அப்போ இந்த முட்டு முரடனுங்க மூஞ்சியை மண்ணுக்குள்ள புதைச்சிக்குவான்களா?
அரைவேக்காடு ராஜேஷ். முழு குற்றவாளி யாருன்னு மக்களுக்கு தெரியும். அப்போ உனக்கும் சேர்த்து லாடம்
வீணா போன ராஜேஷ்...தலைப்பே மூக்குடைப்பு தானே..
யோவ் க்ரிஷ் நீயெல்லாம் தமிழன்னு சொல்லாதே
கருத்துக்கும் தமிழனுக்கும் என்னடா சம்பந்தம்... ஐயோ ஐயோ..
சுப்ரீம் கோர்ட்க்கு மேல் எங்க அப்பீல் செய்வது. என்னமோ திமுகவின் வக்கீல்கள் அணி பயங்கர ஸ்ட்ராங் என்றும் எதையும் சட்டத்தின் படி கிழித்து விடுவார்கள் என்று பீத்திகிட்டு திரிந்தார்கள். என்னாச்சு திமுகவின் திட்டங்கள் எல்லாமே சர்வநாசம் ஆகும். ஏற்கெனவே மண்டை உடைந்து கிடக்கும் திமுகவுக்கு மூக்கு தனியா உடைய வேண்டுமா.
திமுக கோர்ட்டில் பல்பு வாங்குவது அறுபது ஆண்டுகளாக நடப்பதுதான் ....
ஒருவர் பேச கூடாது என்று எந்த நீதிபதியிடம் கோரிக்கை வைத்தாலும் ஏற்க மாட்டார்கள் என்று சிறு குழந்தை கூட அறியும். பதட்ட உச்சியில் திமுக. மறைக்க பட்ட திமுக உண்மைகள் கொஞ்சம் கொஞ்சம் வெளி வரும். மூக்கை உடைக்க வேண்டாம். திமுக இருந்தால் தான் உண்மை அறிய முடியும்.
திமுக மேலே உள்ள சாயம் வெளுத்துவிட்டது. இனி என்ன செய்தாலும் திமுகவால் எதுவும் செய்ய முடியாது. டிஜிட்டல் காலத்துக்கு மாறுங்க